திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டெடுப்பு!

 
கல்வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த ஒரு மாத காலமாக கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் நேற்று முன்தினம் சுமார் 6 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரையில் தென்பட்டது. அந்த கல்வெட்டை கோவில் பணியாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டனர்.

திருச்செந்தூர் முருகன்

கல்வெட்டில் திருநீறு தேய்த்தவுடன் எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தன. அதில், ‘சத்திய தீர்த்தம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில், "இதன் பலன் துன்பம் முழுவதையும் நீக்குதற்குரிய ஊழ்வினையை அறவே தொலைத்து வேத சாஸ்திராதி கல்விகளையும் தந்து சண்முகக் கடவுளுடைய பாதாரவிந்த அருட் செல்வத்தையும் கொடுக்கும்” எனக் கூறப்பட்டிருந்தது.

திருச்செந்தூர்

ஏற்கனவே திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அதில் மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம், முனி தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் ‘சத்திய தீர்த்தம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web