வேற லெவல்.. 20 ஓவரில் 427 ரன் அடித்து உலக சாதனை படைத்த அர்ஜெண்டினா மகளிர் அணி..!

 
அதிக ஸ்கோர் அடித்த அர்ஜெண்டினா
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 427 ரன்கள் அடித்து அர்ஜெண்டினா மகளிர் அணி உலக சாதனை படைத்துள்ளது.

அர்ஜென்டினாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிலி மகளிர் கிரிக்கெட் அணி அங்கு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய அர்ஜென்டினா மகளிர் அணி 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 427 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.

Argentina Women smash highest T20I score against Chile, break several other  records too

அதிலும் குறிப்பாக அந்த அணி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா தரப்பில் லூசியா டெய்லர் 84 பந்தில் 169 ரன்னும், அல்பர்ட்டினா காலென் 84 பந்தில் 145 ரன்னும், மரியா 16 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். சிலி தரப்பில் 64 நோ பால்கள் வீசியது 427 ரன்களை அடிக்க அர்ஜென்டினாவுக்கு பெரும் உதவியாக இருந்தது.

427 Runs In 20 Overs, 52 In Just One! Argentina Women's Cricket Team  Shatters Multiple World Records | Cricket News

இதையடுத்து ஆடிய சிலி அணி 15 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 63 ரன் மட்டுமே எடுத்து 364 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக கருதப்படும் அர்ஜென்டினா அணி 20 ஓவரில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 427 ரன்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளது. 

From around the web