வேற லெவல்.. ஈட்டி எறிதலில் மாஸ் காட்டி தங்கத்தை தட்டிச் சென்ற அண்ணு..!

 
ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தல்
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் கலந்துக்கொண்ட அண்ணு ராணி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

19 வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கியது. இதில் கலந்துக்கொண்டுள்ள இந்தியா தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டி நடைப்பெற்றது. இதில் இந்தியா சார்பில்  அண்ணு ராணி கலந்துக்கொண்டு  66.82 மீட்டர் ஈட்டி எறிந்து அசத்தினார்.

Asian Games: Annu Rani pulls a gold out of the hat - Hindustan Times

இதன் மூலம் தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.  ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும், இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு 61.86 மீட்டர் தூரம் எறிந்து 60 மீட்டர் தூரத்தைக் கடந்த முதல் இந்தியப் பெண் என்ற வரலாறு படைத்தார். மேலும் ஈட்டி பிரிவில் மகளிர் முதல்முறையாக தங்கம் வென்ற பெருமையை அண்ணு ராணி படைத்துள்ளார். 

அண்ணு ராணி வென்ற தங்கத்தின் மூலம் இந்தியா 15வது  தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இதுவரை இந்தியா தற்போது வரை 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web