தேனி சிறையிலிருந்து தப்பிய மற்றொரு கைதி கைது - பிடிபட்டோர் எண்ணிக்கை உயர்வு!
Oct 27, 2026, 08:05 IST
தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய 17 கைதிகளில், தேவாரம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரை ஆண்டிபட்டி அருகே தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு சிறையின் பின்புறக் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த பிரவீன் என்பவர் முதன்முதலில் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஆண்டிபட்டி அருகே சிலம்பரசன் சிக்கியுள்ளார்.

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள 17 தனிப்படைகள், மீதமுள்ள கைதிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்
