அந்த மனசு தான் ... அஜீத் சொன்ன அந்த வார்த்தை... இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் தல நடிகராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத். இவரின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அஜீத் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் கார், பைக் ஓட்டுவதிலும் வல்லவர். சமீபத்தில், அஜித் குமார் கார் ரேஸிங் என்ற அணியை அஜித் துவங்கினார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் இந்த அணி கலந்துகொண்டு 3-ம் இடத்தை பிடித்தது. இந்நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி ' ரேஸில் பங்கேற்கப்போவதை அஜித் சார் முன்கூட்டியே சொல்லிவிட்டார். "ரேஸில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அதனால்தான் என்னை நம்பி பணம், உழைப்பை போட்டுள்ள அனைவருக்காகவும் 2 படங்களையும் முடிக்க வேண்டும் என நினைத்தேன்.
ரேஸிற்கு செல்லும்போது நான் 100 சதவிகிதம் ஆக்ஸலரேட்டரரை அழுத்த வேண்டும். எனக்கு 2 படம் இருக்கு, கமிட்மெண்ட் இருக்கு என நினைத்து 90 சதவிகிதம் மட்டும் அழுத்தினால், நான் ரேஸிற்கு உண்மையாக இல்லை என்பதுபோல ஆகிவிடும்" எனக் கூறினார். அவரின் இந்த வார்த்தையை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாக உள்ளது. இதை வாழ்நாளிலும் நான் மறக்க மாட்டேன்.” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!