"மன்னிப்பு கேட்பது தவறுக்குப் பொறுப்பேற்பதாகாது"... தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஷொட்டு!
முதல்வர் குறித்துப் பேசிய விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கவுன்சிலர் சுதாவிற்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநிலக் காவல்துறை மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து நீதிபதி பல முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
"அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையைக் கைது ஆயுதமாகப் பயன்படுத்துவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. காவல்துறை ஆளுங்கட்சிக்குச் சேவை செய்யும் அமைப்பாக மாறாமல், எப்போதும் நடுநிலையோடு இயங்க வேண்டும்" என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
உயர் பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருப்பவர்கள் தங்களை நோக்கி வரும் அரசியல் விமர்சனங்களைத் சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
"ஒருவர் மன்னிப்பு கேட்பது மட்டுமே அவர் செய்த தவறை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவோ அல்லது குற்றத்தை உறுதிப்படுத்துவதாகவோ ஆகாது" என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியல் விமர்சனங்கள் தொடர்பான வழக்குகளில் காவல்துறையின் அவசரக் கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
