“Apple புதிய CEO-வின் முதல் அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு Thanksgiving... வாரம் முழுவதும் விடுமுறை”

 
ஆப்பிள்

 

Apple நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றுள்ள ஜான் டெர்னஸ், ஊழியர்களுக்கான நீண்டகால விடுமுறை பாரம்பரியத்தை தொடர முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில் Thanksgiving வார விடுமுறை குறித்து அறிவித்துள்ளதாக PhoneArena தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான Apple நிறுவன ஊழியர்களுக்கு Thanksgiving வாரத்தில் திங்கள் முதல் புதன்கிழமை வரை கூடுதல் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனுடன் ஏற்கனவே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாக இருப்பதால், வார இறுதியையும் சேர்த்து தொடர்ந்து 9 நாட்கள் பணியிலிருந்து ஓய்வு கிடைக்கும் வகையில் இந்த ஏற்பாடு அமைகிறது.

Apple Has A New CEO From 1 September As Last Day Of Tim Cook Over Just Ahead Of iPhone 18 Pro Series Launch | Tech News - News18

இந்த நடைமுறை Apple நிறுவனத்தில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதன் தொடக்கம் Steve Jobs காலத்துடன் தொடர்புடையதாக Bloomberg-ன் Apple செய்தியாளர் Mark Gurman குறிப்பிட்டுள்ளதாக PhoneArena தெரிவித்துள்ளது. பின்னர் Tim Cook காலத்திலும் இந்த நடைமுறை தொடர்ந்தது.

எனினும், Apple நிறுவனத்தின் Retail மற்றும் AppleCare ஊழியர்களுக்கு Thanksgiving வாரம் மிகவும் முக்கியமான பணிக்காலமாக இருப்பதால், அவர்களுக்கு அந்த மூன்று கூடுதல் விடுமுறை நாட்கள் பின்னர் பயன்படுத்தும் வகையில் வழங்கப்படுகின்றன. சர்வதேச பணியாளர்களுக்கும் இதேபோன்ற மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Apple will have a new CEO on September 1, in two weeks he may launch these products - India Today

2026 செப்டம்பர் 1-ம் தேதி Apple நிறுவனத்தின் CEO-வாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு அவர் Apple நிறுவனத்தின் Hardware Engineering பிரிவை வழிநடத்தி வந்தார். Tim Cook தற்போது நிறுவனத்தின் Executive Chairman பொறுப்பில் உள்ளார்.புதிய CEO பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே ஊழியர்களுக்கான இந்த நீண்டகால விடுமுறை நடைமுறையை தொடர்ந்திருப்பது Apple நிறுவனத்தின் அடுத்தகட்ட நிர்வாக அணுகுமுறை குறித்த கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, புதிய iPhone 18 வரிசை மற்றும் iPhone Duo அறிமுகத்துக்குப் பிறகு Ternus தலைமையிலான Apple மீது தொழில்நுட்ப உலகின் கவனம் அதிகரித்துள்ளது.