அரசு அதிகாரிகள் ஐபோன் பயன்படுத்த தடை!! அதிரடி உத்தரவு!!

 
apple iphone

ரஷ்யா பிப்ரவரி 2022ல் உக்ரைன் மீது   தாக்குதலை தொடங்கியது. இதனையடுத்து  மார்ச் 2022ல்   ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறி   விற்பனையை  நிறுத்திவிட்டது. உலகின் மற்ற நாடுகளில் இருந்து   ரஷியாவிற்கு ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடு சாதனங்கள் இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வந்தது . தற்போது  ரஷ்யாவில் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மூலம் நாட்டிற்கு பாதுகாப்பிற்கு   அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷியாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

ஐபோன்

இதில் ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து செயல்படுவதாக எஃப்.எஸ்.பி.  குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து  ரஷிய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும்  செய்திக்குறிப்பில்  "ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருப்பதால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம்.

ஆன்லைனில் ஆர்டர்  செய்த ஐபோன்!! பார்சலில் பகீர் அதிர்ச்சி!!

எனவே ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசு அதிகாரிகள் இனி பயன்படுத்தப்படக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. அத்துடன்   பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும்,  மின்னஞ்சல் பரிமாற்றத்திற்கும்   ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்தலாம்" எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் திட்டவட்டமாக  மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web