ஆப்பிள் ப்ரியர்களே உங்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்.. 70 ஆயிரமாக குறைந்த ஆப்பிள் லேப்டாப்..!

 
ஆப்பிள் லேப்டாப் விலை குறைவு
1.15 லட்சம் மிக்க ஆப்பிள் மடிக்கணினி 70 ஆயிரம் ரூபாய்க்கு ப்ளிப்கார்ட்டில் விற்பனையாவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 (Apple MacBook Air M2) ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மடிக்கணினி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது, பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்காக பிளிப்கார்ட்டில் விலை குறைந்துள்ளது. அதன்படி, 40 சதவீத தள்ளுபடியில் மடிக்கணினி கிடைக்கிறது.

MacBook Air 13- and 15-inch with M2 - Apple (IN)

Big Billion Days விற்பனையானது அக்டோபர் 8 முதல் 15 -ம் திகதி வரை நேரலையில் இருக்கும். முக்கியமாக, பிளிப்கார்ட் ப்ளஸ் (Flipkart Plus) உறுப்பினர்களுக்கு மட்டும் அக்டோபர் 7-ம் திகதி விற்பனை தொடங்கும். தற்போது, ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 (Apple MacBook Air M2) விலையானது ரூ.114,990 ஆகும். தள்ளுபடிக்கு பிறகு நாம் இதனை ரூ.69,990 விலையில் வாங்கலாம். அதாவது, இதன் விலையிலிருந்த்து 39 சதவீதம் குறைவு.

Apple MacBook Air (M2) review: What Apple has always wanted | Digital Trends

பிக் பில்லியன் நாட்களில் இந்த சாதனம் ரூ.77,990க்கு கிடைக்கும் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதிலும், ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டில் இதனை வாங்கினால் ரூ.5,000 குறைத்து ரூ.72,990 -க்கு வாங்கலாம். மேலும், நாம் ஏற்கனவே இருக்கும் ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 சாதனத்தை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ.3,000 குறைக்கலாம். இந்த மூன்று சலுகைகளையும் நாம் பயன்படுத்தினால் ரூ.69,990 விலையில் நாம் Apple MacBook Air M2 சாதனத்தை பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From around the web