கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஒற்றை சாளர முறை ?!

 
மாணவிகள்

 இந்தியா முழுவதும் மருத்துவம் சார்ந்த படிப்புக்களை படிக்க நீட் தேர்வு அவசியம். அதே போல் பொறியியல் படிப்புகளை படிக்க ஜேஇஇ  தேர்வுகளை எழுத வேண்டியது கட்டாயம். இந்த வரிசையில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மாற்றாக ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

கல்லூரி

கல்லூரி மாணவிகள்

கவுன்சிலிங் மூலம் படிக்கும் கல்லூரிகள் தீர்மானிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதன் அடிப்படையில் மார்ச் 6ம் தேதி கல்லூரிக் கல்வி இயக்குநர் தலைமையில்  கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும் ஒற்றை சாளர முறையின் அடிப்படையில் அரசு உதவிபெறும் கல்லூரிகளின், உதவிபெறும் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறையிலான மாணவர்  சேர்க்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கல்லூரி மாணவிகள்
இதன்  பிறகு  ஒற்றை சாளர முறையை பின்பற்றுவது குறித்து  தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெற்று செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி  விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web