இன்று முதல் ரூ25000 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

 
பணம்

வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் வகையில் தமிழக அரசால் “ நான் முதல்வன்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.   இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சி பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என பல  முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது.

நான் முதல்வன்

அதில் ஒன்றாக `நான் முதல்வன்' போட்டி தேர்வுகள் பிரிவு  மூலம் ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஊக்கத்தொகை திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.   இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்" என்று கூறி இருந்தார்.

நான் முதல்வன்
இந்தநிலையில் 'நான் முதல்வன்' ஊக்கத்தொகை திட்டப் பிரிவில் யுபிஎஸ் முதன்மை தேர்வுக்கான ரூ25000  ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இவர்கள் தமிழகத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த  மாணவர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web