1 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை... இன்று வழங்கினார் பிரதமர் மோடி!

 
...

நாடு முழுவதும் இன்று காணொளி காட்சி வாயிலாக ஒரு லட்சம் பேருக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். 
மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளிலும் பணி நியமனங்களை வழங்கும் வகையில் ரோஜ்கார் மேளா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பணி நியமான ஆணைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று நாடு முழுவதும் 47 இடங்களில் ரோஜ்கார் மேளா நடைபெற உள்ளது

.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, காணொளி காட்சி வாயிலாக ஒரு லட்சம் பேருக்கு பணியமான ஆணைகளை வழங்கினார். 
வருவாய்த்துறை, உள்துறை, உயர்கல்வித்துறை, அணுசக்தி துறை, பாதுகாப்பு துறை, மருத்துவத்துறை, பழங்குடியினர் நலத்துறை, ரயில்வே துறை ஆகிய துறைகளில் இந்த பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

From around the web