பாஜக அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து!

 
அமித்ஷா

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற உள்ள நிலையில், இன்று பாஜக தலைவர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாட்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக இருந்த நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அமித்ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை பாஜக மேல்மட்ட தலைவர்களின் பார்வை தமிழகத்தின் மீது விழுந்திருக்கிறது. அடுத்தடுத்து பல கட்டங்களாக தொடர்ந்து தமிழகத்திற்கு வாக்கு சேகரிக்க வந்து செல்கின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை எந்த தலைவருமே தமிழகத்திற்கு மக்களைச் சந்திக்க வராதது பேசுபொருளாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து  அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

அமித்ஷா
பாஜக கூட்டணியில், பாமக, தமாகா, அமமுக கட்சிகள் இணைந்துள்ளன. சென்ற முறை பாஜக கூட்டணியில் இருந்த, முக்கிய கட்சியான அதிமுக இந்த முறை கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.கடந்த மக்களவை  தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தேனியில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில்  தமிழகத்தில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி இதுவரை 5 முறை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம்  வருகை தந்த நிலையில் மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அமித்ஷா

அவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று தமிழகம் வர இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வேறொரு தேதியில் வருவார் என்றும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web