தீவிரப் புயலாக வலுப்பெற்றது 'அக்வான்'... வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

 
அர்னாப் புயல்

தெற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'அக்வான்' புயல் தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த 'அக்வான்' புயல் மேலும் வலுவடைந்து தற்போது தீவிரப் புயலாக உருவெடுத்துள்ளது. இந்தத் தீவிரப் புயலானது தற்போது மணிக்கு வெறும் 3 கிலோமீட்டர் வேகத்தில் மிக மெதுவாக வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயல்

இந்தப் புயல் தமிழகக் கரையை ஒட்டி நகராமல் திசைமாறுவதால், தமிழகத்திற்கு நேரடிப் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புயலின் நகர்வு காரணமாகச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.