ஏ.ஆர்.ரஹ்மான் வீடு திரும்பினார் ... ரசிகர்கள் நிம்மதி!

 
ஏ.ஆர்.ரஹ்மான்


பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அறிக்கை

 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்ததை அடுத்து, தற்போது அவர் நலம்பெற்று வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான்

 இதனை உறுதி செய்துள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார் என அறிக்கை வெளியிட்டுள்ளது.