செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை! வீட்டில் மின்சாரத்தை துண்டித்து மர்ம கும்பல் அட்டூழியம்

 
திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய குணசேகரன் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

குணசேகரனின் வீட்டிற்கு வெளியே மின்சாரத்தைத் துண்டித்த மர்ம கும்பல், இருளைப் பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

கொல்லப்பட்ட குணசேகரன் மீது பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் வனத்துறை சார்பில் செம்மரக்கட்டை கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தக் கொலைக்கான காரணம் என்ன, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.