இன்று பள்ளிகள் விடுமுறையா? குமரியில் கொட்டித் தீர்க்கும் மழை... கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' - மாணவர்கள் எதிர்பார்ப்பு!

 
மழை மாணவி மழை மாணவி

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்வதற்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று தென் தமிழகத்தின் எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரியில் வழக்கத்தை விட மிக பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று வடகிழக்கு பருவமழை  தொடக்கம்!      நம்ம மாவட்டத்திற்கு கனமழை !

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் புதிய கல்வியாண்டிற்காக இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாகச் செய்யப்பட்டுள்ளன. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது விடுக்கப்பட்டுள்ள 'ஆரஞ்சு அலர்ட்' மற்றும் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பரவலாகப் பார்க்கப்படுகிறது.

மழை கனமழை

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் சூழ்நிலையைக் கண்காணித்து இன்னும் சற்று நேரத்தில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பள்ளிக்குக் கிளம்பத் தயாராகி வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.