நீங்க ரோடு ராஜாவா?.. புதிர் போட்ட காவல்துறை.. குழம்பி போன பொதுமக்கள்..!

நீங்க ரோடு ராஜாவா? சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் வைத்த பேனர்கள் வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவது இன்னும் கடினம். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற முடியும் என போலீசார் கருதுகின்றனர்.
அந்த நம்பிக்கையோடு, இப்போது சென்னை போக்குவரத்துக் காவல் துறை கையிலெடுத்திருக்கும் வியூகம் தான், 'நீங்க ரோடு ராஜாவா?' என்ற பேனர். சென்னையின் முக்கிய சாலைகளில் நீங்க ரோடு ராஜாவா? ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் இதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் மற்றும் இந்த கேள்விக்கான பதில் புரியாமல் பார்த்து செல்கின்றனர்.
போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பவர்களை ரோடு ராஜாக்கள் என்று சிலர் கூற, இந்த போஸ்டர் என்னவென்று தெரியவில்லை என வேறு சிலர் பதில் அளிக்கின்றனர். ஒரு காலத்தில் புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க நீங்க ரோடு ராஜாவா? என போக்குவரத்து போலீசார் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், இந்த விழிப்புணர்வு கேள்விக்கான பதிலை விரைவில் அறிவிக்க உள்ளதாக போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!