3வது முறை மகுடம்.. 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது அர்ஜென்டினா!

 
ஹாக்கி அர்ஜென்டினா!

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி கோப்பையைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இறுதி ஆட்டத்தின் நேர முடிவில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட ஷூட்-அவுட் முறையில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஹாக்கி

இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 16 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையைத் தன்வசமாக்கியுள்ளது. மேலும், வரலாற்றில் அந்த அணி இக்கோப்பையைக் கைப்பற்றுவது இது மூன்றாவது முறையாகும்.