”சாலை வசதி இல்லை”.. ஏன் அடிக்கடி அளவீடு பண்றீங்க.. அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்..!!

 
ஆலம்பாடி  கிராமம்

திருவாடானை அருகே அரசு புறம்போக்கு இடத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கும்.  இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால்  பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆலம்பாடி  கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள்  சென்று வர பாதை இல்லாததால் நோய்வாய் பட்டவர்களையும்,  இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லவும் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அங்கு பாதை அமைப்பதற்கு போதிய இடம் இல்லாத நிலையில் அரசு அனாதீனமான இடமான சர்வே எண் 183/1 பகுதியை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் ஒரு தரப்பினர் அளவீடு செய்யக் கூடாது என  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மற்றொறு தரப்பினர் அளவீடு செய்ய சொன்னதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்   அளவீடு செய்ய முடியாத நிலையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே இரண்டு முறை அளவீடு செய்யப்பட்ட பின்பும் மீண்டும் அளவீடு ஏன் செய்கிறீர்கள் என ஒரு தரப்பினர் கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  திருவாடானை காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு பிடிஒ மலைராஜன் வருவாய் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் சர்வேயர் ஆகியோர் அளவீடு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web