அண்ணன் முகத்தில் தண்ணீர் ஊற்றி தகராறு.. 35 ஆண்டுகள் சிறை செல்லும் முதியவர் !!

 
டேவிட் ஷெர்மன் பவெல்சன்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லி கவுன்டி என்ற நகரில் டேவிட் ஷெர்மன் பவெல்சன் என்ற 64 வயது முதியவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருடன் இவரது மூத்த சகோதரரான 65 வயது நபரும் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வீட்டில் இருந்தபோது சாப்பிட சென்றுள்ளனர். வீட்டில் எலுமிச்சம் பழத்தை கொண்டு ஒரு உணவு பொருளை தாயரித்து வைத்திருந்த நிலையில், அதை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த உணவை டேவிட் ஷெர்மன் பவெல்சன் முழுவதுமாக சாப்பிட்டு தீர்த்துவிட்டார்.

டேவிட் ஷெர்மன் பவெல்சன்

இதனால் தனக்கு சாப்பாடு இல்லையென அவரது மூத்த சகோதரன் கேட்டுள்ளார். மேலும் அங்கு டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து வேகமாக மூத்த சகோதரன் முகத்தில் ஊற்றியுள்ளார். அப்போது சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. அச்சமடைந்த மூத்த சகோதரன் இது குறித்து, போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் மூத்த சகோதரனை தாக்கிய டேவிட் ஷெர்மனை கைது செய்தனர்.

டேவிட் ஷெர்மன் பவெல்சன்

புளோரிடா மாகாணத்தின் சட்ட விதிகளின் படி குடும்ப உறுப்பினர்களை அறிந்தே தாக்குதல் நடத்தினால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

From around the web