ஹோம் தியேட்டரில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டதால் வாக்குவாதம்.. பக்கத்து வீட்டு நபரை அடித்துக்கொன்ற கொடூரம்!

 
 கலுவா அஹிர்வர்

மத்தியப் பிரதேச மாநிலம் அரோக் நகர் மாவட்டம் கோரகலா பகுதியைச் சேர்ந்தவர் கலுவா அஹிர்வர். அவரது பேத்தி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் பாக்சில் பாடலை மிகவும் சத்தமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு குடும்பங்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கலுவா அஹிர்வரின் குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

பின்னர், போலீசார் அங்கு வந்து அண்டை வீட்டாரின் ஹோம் தியேட்டரை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கலுவா அஹிர்வரின் அண்டை வீட்டாரான ரதிராம் அஹிர்வர் மற்றும் முகேஷ் அஹிர்வர் ஆகியோர் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலுவா அஹிர்வரை கட்டை மற்றும் மண்வெட்டியால் அடித்துக் கொன்றனர்.

போலீஸ்

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கலுவா அஹிர்வரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலையாளிகளான ரதிராம் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web