கர்ப்பிணி பெண்ணைத் தள்ளியதால் கருச்சிதைவு... வீட்டு உரிமையாளர் வெறிச்செயல்!

 
விக்னேஷ்-கவிதாவர்ஷினி

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைக்கு குடியிருந்த கர்ப்பிணி இளம்பெண்ணுக்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில், இளம்பெண்ணைக் கீழே தள்ளியதால் கருக்கலைப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை அண்ணாநகர் வியூசி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில் விக்னேஷ்-கவிதாவர்ஷினி தம்பதியினர் மாத வாடகையாக ரூ.9,000 கொடுத்து வசித்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ பரிசோதனையில் கவிதா வர்ஷினி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 2வது மாடி வரை படிக்கட்டுகளில் ஏற வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கவிதா வர்ஷினியின் உடல்நிலை படிக்கட்டில் ஏற அனுமதிக்காததால் வீட்டை காலி செய்வதாக வீட்டின் உரிமையாளர் சுரேஷிடம் விக்னேஷ் கூறினார். மூன்று மாத வாடகை பணத்தையும், வீட்டிற்கு சுண்ணாம்பு அடிப்பதற்கு ரூ.8,000 தர வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர் சுரேஷ் கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விக்னேஷ், அவருக்கு முன்பணமாக 40,000 கொடுத்துள்ளேன். 3 மாத வாடகையை ஏன் கழிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றும், மீதி 4000 கொடுத்து வீட்டை காலி செய்யுமாறு சுரேஷ் மிரட்டியுள்ளார். தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, விக்னேஷை தாக்கும் போது, கர்ப்பமாக இருந்த அவரது மனைவி கவிதாவர்ஷினியை தள்ளினார். இதனால் கவிதா அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்த நிலையில், வயிற்றில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த விக்னேஷ் உடனடியாக தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

கவிதா வர்ஷிணியைப் பரிசோதித்த மருத்துவர்கள் கருச்சிதைவு ஏற்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அப்போது உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர் வெங்கடேசன் ஆகியோர் வீட்டின் உரிமையாளருக்கு சாதகமாக செயல்பட்டு புகாரை வாபஸ் பெறுமாறு பாதிக்கப்பட்ட தம்பதியினரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

மேலும் வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வீட்டு உரிமையாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்த வீட்டு உரிமையாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட தம்பதியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web