பணவரவு, திருமண யோகம் - ஆவணியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் மேஷ ராசி!

 
ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

சிம்ம ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் இந்த ஆவணி மாதத்தில், மேஷ ராசியினருக்குப் பொருளாதார ஏற்றமும், சுப நிகழ்ச்சிகளும் கை கூடிவரும் அற்புத காலகட்டமாக அமையவுள்ளது.

சுக்கிரன் ஏழாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சனியின் வக்கிர கதி மற்றும் குருவின் பார்வையால் செலவுகள் அதிகரித்தாலும், அதற்கு இணையான பணவரவும் வந்து சேரும். நீண்ட நாட்களாகத் திருமணத் தடைகளைச் சந்தித்து வந்தவர்களுக்குத் தடைகள் அனைத்தும் விலகி, வரன் அமையும். சுபச் செலவுகள் மற்றும் குடும்பத்தில் கொண்டாட்டங்கள் அதிகரிக்கும்.

புது செல்போன், லேப்டாப் வாங்குவது, புதிய படிப்புகளைக் கற்றுக்கொள்வது மற்றும் சுய பராமரிப்புக்கான சுப விரயங்களை மேற்கொள்வீர்கள். முகத்தில் வசீகரமும், சமூகத்தில் புகழ் மற்றும் தலைமைத்துவமும் தேடி வரும்.

புதிய திட்டங்களையோ அல்லது செய்யப்போகும் காரியங்களையோ மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். தேவையில்லாத புறம் பேசுதல் அலைச்சலைத் தரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயிறு தொடர்பான உபாதைகள் வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை அவசியம். தடைகள் விலகி காரியங்களில் வெற்றி பெறக் குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருவது மிகுந்த ஏற்றத்தையும் நன்மைகளையும் தரும்.