துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து! 20-க்கும் மேற்பட்டோர் காயம்”!
அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற பயணிகள் வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவில் - சாலைக்குறிச்சி இடையே பயணிகள் வாகனம் சென்று கொண்டிருந்தது. அதில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பலர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென சாலையோரம் கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்ததற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
