மலையாளத்தில் கதாநாயகனாக களமிறங்கும் ”கைதி”அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். அகமது கபீரின் 'ஜூன்', 'மதுரம்' மற்றும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்' என, அனைத்து படைப்புகளும் பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
My very first Malayalam feature film. Super excited for this cute rom-com. A sweet love story directed by @ahammedkhabeer Thank you for believing in me, Ahammed 🤗
— Arjun Das (@iam_arjundas) February 14, 2024
A @HeshamAWMusic Musical 🎶❤️
Will surely need all your blessings, love, & support as always 🤗#Newbeginnings pic.twitter.com/EcUcjprdBa
'ஹிருதயம்', குஷி, & ஹாய் நானா ஆகிய படங்களில் மாயாஜால இசைக்கு சொந்தக்காரரான ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.தமிழ் திரையுலகில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கைதி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.
இவர் வசந்தபாலனின் அநீதி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தற்போது சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ரசவாதி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடித்து வருவதாக அர்ஜுன் தாஸ் அறிவித்துள்ளார். இயக்குநர் அஹமது கபீர் இயக்கும் படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறார் அர்ஜுன் தாஸ். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அற்புதமான இந்த கூட்டணியின் அடுத்தகட்ட தகவல்கள் விரைவில்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!