"விஜய் நடிகையுடன் லிவிங் டுகெதரில் இருக்கிறார்" - அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்துக் கடுமையான தனிநபர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், புதிய கட்சிகள் மற்றும் கூட்டணிகள் குறித்து அர்ஜுன் சம்பத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தில் தற்போது நான்கு முனைப் போட்டி நிலவினாலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உண்மையான களத்திலேயே இல்லை. சொந்த மனைவியுடனே கூட்டணி வைக்க முடியாத விஜய், மக்களுடன் எப்படிக் கூட்டணி வைத்து வெற்றி பெறுவார்?" என்று கேள்வி எழுப்பினார். தமிழர்களின் பண்பாடான 'ஒருவனுக்கு ஒருத்தி' எனும் வாழ்க்கை முறையை விஜய் மதிக்கவில்லை என்றும் அவர் சாடினார்.

விஜய் தற்போது ஒரு பிரபல நடிகையுடன் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்து வருவதாகத் தனிப்பட்ட முறையில் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். அர்ஜுன் சம்பத்தின் இந்தத் தனிநபர் விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வப் பதிலடி எதுவும் தரப்படவில்லை. எனினும், அரசியல் தலைவர்கள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியல் நாகரிகம் அல்ல எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

2026 தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி, விஜய்யின் தவெக அல்லது நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் எனப் பலமுனைப் போட்டிகள் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில் அர்ஜுன் சம்பத்தின் இந்தப் பேச்சு கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
