ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. மேலும் 3பேர் அதிரடியாக கைது!

 
ஆம்ஸ்ட்ராங்

சென்னை செம்பியம் பகுதியில் வசித்து வருபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று இரவு 7 மணிக்கு பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆம்ஸ்ட்ராங்

சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்தது.

ஆம்ஸ்ட்ராங்

இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

From around the web