ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது!
Aug 1, 2026, 17:55 IST
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
வழக்கை சிபிஐ தனது கட்டுப்பாட்டில் எடுத்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாகப் புதிதாக வழக்கைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகக் காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான அனைத்து ஆவணங்கள், தடயங்கள் மற்றும் சாட்சிய ஆதாரங்களைச் சிபிஐ அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இக்கொலைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முதன்மைச் சதித்திட்டம், இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் இதற்கான முக்கியக் காரணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் இனி வரும் நாட்களில் விரிவான விசாரணையை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
