நடிகர் அஜீத்துக்கு புது புராஜக்ட் வழங்கிய ராணுவம்!!

 
ajith

தமிழ் சினிமாவில் ” தல” ஆக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜீத்குமார். இவர்  நடிப்பைத் தாண்டி பைக் ரேசிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன்கள் உருவாக்குவது என பன்முகத் திறமை வாய்ந்தவராக இருந்து வருகிறார்.  அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில்  தக்‌ஷா குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.  ட்ரோன்கள் தயாரிப்பது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குவதற்காக அஜித் ஆலோசராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ajith


அஜித்தின் தக்‌ஷா குழு  2018ல்  உலக அளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டிகளில் கலந்து கொண்டது.அந்த வகையில்  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த ட்ரோன் போட்டியில்  கலந்து கொள்வதற்காக  சீனா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகளுடன் இந்தியா சார்பில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்‌ஷா குழுவும் கலந்து கொண்டு பல அசத்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.   பல்வேறு சர்வதேச ட்ரோன் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடி வரும் தக்‌ஷா குழு  மாநில அளவில், ட்ரோன் தயாரிப்பில் முன்னிலை வகித்து வருகிறது  

ajith

கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசுடன் இணைந்து  ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து உதவியது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு மத்திய அரசுக்கான ட்ரோன்களை தயாரிக்கவும் தக்‌ஷா குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  தற்போது  இந்திய ராணுவத்திற்காக ட்ரோன்களை தயாரித்து கொடுக்கும் பணிக்கு தக்க்ஷா குழு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த 12 மாதங்களில் இந்திய ராணுவத்திற்கு தேவையான 200 ட்ரோன்களை தக்‌ஷா குழு தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.165 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web