“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”.. ஒரே வரியில் ஸ்கோர் செய்த பிரதமர் நரேந்திர மோடி!
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் இன்று நவம்பர் 28ம் தேதி மாலை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இத்தீர்ப்பை வரவேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ எனக் குறிப்பிட்டு, அதே வாசகத்தை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் பதிவிட்டுப் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் வழிமுறைகளுடன் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழில் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ எனப் பதிவிட்டார். தொடர்ந்து அதே முழக்கத்தை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பக்தர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் கோவில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரதமர் மோடி மூன்று மொழிகளில் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு பக்தர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
