மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்... 2 வீடுகளில் தீவைப்பு... பதற்றநிலை!!

 
மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த   மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பட்சோய் என்ற இடத்தில் நேற்று இரவு 2 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.வீடுகளுக்கு தீவைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.  வீடுகளுக்கு தீவைத்த நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் மீண்டும் வன்முறை பரவாத வகையில்  போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  

மணிப்பூர்

ஊரடங்கு உத்தரவையும் மீறி, நேற்று காலை பிஷ்னுபூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன்  போலீசாரின் தடுப்புக்களை அகற்றுவதற்கு முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் வைக்க அஸ்ஸாம் ரைபிள்ஸ், மணிப்பூர் போலீசார் பல சுற்றாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

மணிப்பூர்

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையில் அமர்ந்து விட்டனர். இவர்களில் சிலர் போலீசார் மற்றும் ராணுவத்தினர் போராட்டம் நடக்கும் பவுகாக்சோ இகாய்க்கு செல்வதை தடுத்துக் கொண்டிருந்தனர்.இது குறித்து  காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “டெல்லியில் ஜி20 நடக்கிறது. அதே நேரத்தில் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   4 மாதங்களுக்கு பின்னரும் மணிப்பூரில் வன்முறை நீடிக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் இரட்டை என்ஜின் அரசுக்கோ மணிப்பூர் நிலைமை சாதாரணமானதாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். 

From around the web