“அதிக ஆர்வம் கொண்ட அருணா... ஒரு கட்டத்துல முடியல...” இளம்பெண் கொலையில் வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்!

 
அருணா கொலை ஆந்திர

ஆந்திராவைச் சேர்ந்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரும்பு வெட்டும் தொழிலாளி பாரதிராஜா காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நகரி பகுதியைச் சேர்ந்த அருணா (48) என்பவர், உறவினர் திருமணத்திற்காக வதட்டூர் கிராமத்திற்கு வந்திருந்த நிலையில், பெரியபாளையம் அருகே தொட்டாரெட்டி குப்பம் வயல்வெளியில் கொலை செய்யப்பட்டுச் கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றப்பட்டும், தீயால் எரிக்கப்பட்டும் அடையாளம் தெரியாதவாறு சிதைக்கப்பட்டிருந்தது.

கள்ளக்காதல்

ஊத்துக்கோட்டை காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், வதட்டூரைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான பாரதிராஜா (44) என்பவருக்கும் அருணாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்துள்ளது.

அருணா தமக்கு அதிகளவில் செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், இயற்கைக்கு மாறான முறையில் இருக்கக் கட்டாயப்படுத்தியதுடன் அதனைத் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் பாரதிராஜா வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அடிக்கடி தன்னை உல்லாசத்திற்கு அழைத்துத் தொல்லை கொடுத்ததால் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

கொலை நடந்த இடத்திற்கு அருகில் கிடந்த அருணாவின் செல்போன் எண்களை வைத்து விசாரித்த காவல்துறையினர், பாரதிராஜாவைக் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.