நத்தையை ஓட்டுடன் உண்ணும் அதிசய தவளை... வைரல் வீடியோ !

 
தவளை

 

அருணாச்சல பிரதேசத்தில் கொம்பு போன்ற அமைப்பைக் கொண்ட 5 புதிய வகை தவளை இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் நத்தைகளை ஓட்டுடன் விழுங்கி உண்ணும் தனித்துவமான தவளை இனமும் இடம்பெற்றுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சோனாலி கார்க் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், சுமார் 5 ஆண்டுகள் மேற்கொண்ட கள ஆய்வில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

'ஜிங்கோபிரைஸ்' (Jingophrys) பேரினத்தைச் சேர்ந்த இந்த 5 புதிய தவளை இனங்களுக்கும் ஜிங்கோபிரைஸ் தனோகோகோ, தானிதாட்டி, சியாங்கென்சிஸ், ஹர்டி, வுலார்சோனி எனப் பெயரிடப்பட்டுள்ளன.

இதில் தனோகோகோ வகை தவளை, நத்தையை அதன் ஓட்டுடன் விழுங்கி உண்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நத்தையை உண்ணும் தவளை கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.'ராயல் சொசைட்டி ஓப்பன் சயின்ஸ்' இதழில் நவம்பர் 11-ல் வெளியான இந்த ஆய்வு, இமயமலையின் உயிரினப் பன்முகத்தன்மை குறித்த புதிய தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது