மனைவியையும் காதலனையும் கல்லால் அடித்து கொலை செய்த கணவன்!

 
அருப்புக்கோட்டை

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மனைவியையும், அவருடன் பழகி வந்த நபரையும் கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலையம்பட்டி கொத்தனார் காலனியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (26). இவருக்கும் பொன்னழகு (22) என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவருடன் பொன்னழகுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனந்தராஜ், சரவணக்குமாரின் நண்பர் என்றும் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இருவருக்கும் இடையேயான நெருக்கம் குறித்து அறிந்த சரவணக்குமார், மனைவியையும் ஆனந்தராஜையும் ஏற்கனவே எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரவணக்குமார், மனைவியும் ஆனந்தராஜும் ஒன்றாக இருந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதையடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கிய அவர், பாறாங்கல்லால் தலையில் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவாக இருந்த சரவணக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அவர்களது 3 குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.