திமுவாக? அதிமுகவா? விஜய் பிரிக்கும் வாக்குகள் யாரை சாய்க்கும்?!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் அரியணையில் அமருமா அல்லது அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் எகிறியுள்ளது. இந்த முறை முதல் தேர்தலைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எந்த அளவிற்கு வாக்குகளைப் பெறுவார் என்பதில் பெரும் அரசியல் திருப்பங்கள் ஒளிந்துள்ளன. இதுவரை இரு துருவ அரசியலாக இருந்த தமிழகத்தில் விஜய் ஏற்படுத்தப்போகும் தாக்கம் யாருடைய வெற்றி வாய்ப்பை பறிக்கும் என்பதே தற்போதைய பிரதான விவாதமாக மாறியுள்ளது.

புதிதாக களமிறங்கியுள்ள தவெக பிரிக்கும் வாக்குகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு அதிகம் இருப்பதாகக் கருதப்படுவதால் இது பாரம்பரியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இதனால் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தயாராக உள்ளன. இந்த கணிப்புகள் விஜய்யின் வருகையால் யாருக்கு பலம் குறைந்துள்ளது என்பதை ஓரளவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தல் களம் முன்பை விட மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மிகுந்த படபடப்பில் உள்ளனர். கோடிக்கணக்கான மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும் என்பதால் தமிழகமே தற்போது திக் திக் நிலையில் உள்ளது.
