தமிழகத்தில் 6 மாதங்களில் 39,716 சாலை விபத்துகள் - 10,309 பேர் உயிரிழப்பு - நெடுஞ்சாலைத்துறை தகவல்!
தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களிலேயே சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதிலும் தமிழகத்தில் மொத்தம் 71,000 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி 18,000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி - ஜூன் என நடப்பு 2026-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 39,716 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 10,309 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளது.
2025-ஆம் ஆண்டின் அரையாண்டுப் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடுகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரிட்ட விபத்துகளும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அவசியம்: அதிவேகப் பயணம், சாலைப் பராமரிப்புக் குறைபாடுகள் மற்றும் விதிகளை மீறுதல் ஆகியவையே இதற்குக் காரணம் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், சாலைப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
