இந்திய விமானப்படைக்கு புதிய தலைமை தளபதி! ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று பொறுப்பேற்பு

 
தளபதி

 

இந்திய விமானப்படையின் 29-வது தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று (அக்டோபர் 31) பொறுப்பேற்றார். இதுவரை துணை விமானப்படை தலைமை தளபதியாகப் பணியாற்றி வந்த அவர், ஏர் சீஃப் மார்ஷல் அந்தஸ்தில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

இதற்கு முன்பு தலைமை தளபதியாக இருந்த அமர் பிரீத் சிங், அக்டோபர் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதையடுத்து இந்தப் பதவி மாற்றம் நடைபெற்றுள்ளது. இதற்கான நியமனத்தை மத்திய அரசு அக்டோபர் 6-ம் தேதி அறிவித்திருந்தது.

1966-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி பிறந்த அசுதோஷ் தீட்சித், 1986-ம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் பணியில் சேர்ந்தார். சுமார் 40 ஆண்டுகாலப் பணியில் 3,500 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பல்வேறு ரக விமானங்களை இயக்கிய அனுபவம் அவருக்கு உள்ளது.

Air Chief Marshal Ashutosh Dixit Takes Charge As New IAF Chief, Succeeding A P Singh After His 43-Year-Long Career In The Force

மிராஜ்-2000, மிக் ரக விமானங்கள், ஜாகுவார், ஹாக் மற்றும் தேஜஸ் உள்ளிட்ட விமானங்களை இயக்கியுள்ளார். மேலும், ஆபரேஷன் சஃபேத் சாகர், ஆபரேஷன் ரக்ஷக், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய ராணுவ நடவடிக்கைகளிலும் பங்கேற்றுள்ளார்.

வாயு சேனா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம், அதி விசிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அவரது பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.