ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானிடம் வீழ்ந்தது இந்தியா; 6-0 என்ற கோல் கணக்கில் தோல்வி!

 
மகளிர் கால்பந்து மகளிர் கால்பந்து

தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 12-வது ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து (U-20) தொடரில், குரூப் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே 6 முறை சாம்பியனான ஜப்பான் அணி அதிரடி காட்டத் தொடங்கியது.

கால்பந்து

ஜப்பான் வீராங்கனைகளின் வேகமான ஆட்டத்திற்கு முன்னால் இந்திய தற்காப்பு அரண் நிலைகுலைந்தது. ஆட்ட நேர முடிவில் 6-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி இந்தியாவைத் துவம்சம் செய்தது. சில சந்தர்ப்பங்களில் இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்த போதிலும், ஜப்பானின் பலமான தடுப்பாட்டத்தை மீற முடியவில்லை.

இதே 'சி' பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சீன தைபே அணியைச் சுருட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் அணிகள் தங்களது பிரிவில் முன்னிலை பெற்றுள்ளன.

கால்பந்து

முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்திய அணிக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. வரும் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பலமான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.