ஆசிய கோப்பை இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு!!

 
ஆசிய உலகக் கோப்பை

இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. இதனால் ரசிகர்கள் இந்த ஆண்டிலாவது கோப்பையை வெல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கிடக்கின்றனர்.  இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும்  என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.  


 

உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பைக்கு தேவையான அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன. இந்திய அணி இன்றுபிற்பகல் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆசிய உலகக் கோப்பை

இன்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர்  கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அஜித் அகர்கர் இந்த பட்டியலை வெளியிட்டார்.  இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

From around the web