செம.. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகள்!!

 
ஆசிய ஹாக்கி போட்டிகள்

இன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 7வது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023 ”  நடைபெற உள்ளது இந்த போட்டிகள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும்.   இந்தியாவுடன் இணைந்து தமிழக  அரசு நடத்தி வரும் இப்போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள்  கலந்து கொள்கின்றன.  

 

ஆசிய ஹாக்கி போட்டிகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.   ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில்  இன்று மாலை 4 மணிக்கு  தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் ஜப்பான் - கொரியா,  மாலை 6:15 மணிக்கு மலேசியா -பாகிஸ்தான் , இரவு 8.30 மணிக்கு இந்தியா சீனா   அணிகள் மோத உள்ளன.

ஆசிய ஹாக்கி போட்டிகள்


 
சென்னை, எழும்பூர், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்தும் வகையில், ரூ16 கோடி  மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் , ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் இவைகளை முதலமைச்சர் ஸ்டாலின்   ஜூலை 28ம் தேதி  திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web