ஆசிய விளையாட்டு 2026: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்! துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணி சாதனை!

 
துப்பாக்கி

 

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான ஸ்கீட் அணிப் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.ரைசா தில்லான், பரீனாஸ் தாலிவால் மற்றும் மகேஸ்வரி சவுகான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, ஸ்கீட் போட்டியில் மொத்தம் 331 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இந்திய அணியில் ரைசா தில்லான் மற்றும் பரீனாஸ் தாலிவால் ஆகியோர் தலா 111 புள்ளிகளும், மகேஸ்வரி சவுகான் 109 புள்ளிகளும் பெற்றனர். மூவரின் மொத்த செயல்பாடு இந்திய அணியை பதக்க நிலைக்கு கொண்டு சென்றது.

India wins two silver medals in shooting at Asian Games 2026

இந்தப் போட்டியில் சீனா தங்கப்பதக்கத்தையும், கஜகஸ்தான் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன. இந்திய அணி 331 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.

இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் 2026 ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.ஆசிய விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில், பெண்கள் ஸ்கீட் அணியின் இந்த வெண்கலப் பதக்கமும் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இணைந்துள்ளது.