ஆசிய விளையாட்டு.. ஆண்கள் கபடி பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை!

 
ஆண்கள் கபடி

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் கபடிப் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் கபடிப் போட்டிகளில் இந்தியா தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை முழுமையாக நிலைநாட்டியுள்ளது.

ஆண்கள் கபடி

ஆண்கள் கபடிப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஈரானும் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே அனல் பறந்த இந்தப் போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் போராடினர்.

இறுதி வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, ஈரான் அணியை 40-34 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

ஆண்கள் கபடி

ஏற்கனவே நடைபெற்ற மகளிர் கபடிப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது ஆண்களும் தங்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் இத்தொடரில் இந்திய அணி மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.