114 பதக்கங்களுடன் இந்தியா சாதனை... இன்றுடன் நிறைவு பெறுகிறது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்!

 
114

ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் இன்று நிறைவடைகின்றன. இந்திய அணி 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா பெற்ற 108 பதக்கங்களைக் காட்டிலும் இந்த முறை அதிக பதக்கங்களை வென்றுள்ளது.

Asian Para Games 2026: India conclude campaign with historic 114 medals

இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. இரட்டைத் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மோனா அகர்வால், பாரா தடகள வீரர் நிஷாத் குமார் ஆகியோர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்கின்றனர். விழாவின் நிறைவில் போட்டிக் கொடி, அடுத்த போட்டியை நடத்தவுள்ள கத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.