ஜப்பானில் நடிகை அசின் மகளின் 9-வது பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரல் வீடியோ!

 
அசின்

 

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அசின். ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு திரையுலகிலிருந்து விலகினார்.

தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் அசின், தனது மகள் அரின் ராய்னின் 9-வது பிறந்தநாளை ஜப்பானில் கொண்டாடியுள்ளார். இந்தக் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மகளின் பிறந்தநாள் கொண்டாட்டப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. திரையுலகில் இருந்து விலகியிருந்தாலும், அசின் தொடர்பான செய்திகள் மற்றும் அவரது குடும்பப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.