டிராக்டருக்குப் பதில் வயலை உழுத யானை ... வியப்பூட்டும் வீடியோ!
அசாம் மாநிலம் கோலகாட் மாவட்டத்தில், டிராக்டருக்குப் பதிலாக யானையைப் பயன்படுத்தி விவசாய நிலத்தை உழுத சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
An unusual sight in Assam’s Golaghat district has caught attention, as Manik, a tusked elephant, was seen ploughing a mustard field in Mouphuloni under the guidance of his mahout, Atul Karmakar. The sight of the elephant working in the field offers a glimpse of the unique bond shared by Manik and his mahout. #Golaghat #Assam #ManikTheElephant #Wildlife #NortheastIndia
— India Today NE (@IndiaTodayNE) October 18, 2026
நுமாலி நகர் அருகே முர்புலானி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அதுல் கர்மாகர், ‘மாணிக்’ என்ற ஆண் யானையை வளர்த்து வருகிறார். தனது நிலத்தில் கடுகு சாகுபடிக்காக மண்ணைப் பண்படுத்தும் பணியில், பாகனின் வழிகாட்டுதலுடன் யானையின் உடலில் கலப்பையைக் கட்டி உழவுப் பணியில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. யானை வயலில் மெதுவாக நடந்து கலப்பையை இழுத்துச் செல்லும் காட்சிகள் பலரது கவனத்தைப் பெற்றுள்ளன.
இந்தக் காட்சிக்கு சிலர் வியப்பு தெரிவித்தாலும், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். நவீன விவசாய இயந்திரங்கள் உள்ள நிலையில், யானையை கடினமான வேலையில் ஈடுபடுத்துவது அதன் நலனுக்கு ஏற்றதல்ல என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. விலங்குகளின் நலன் மற்றும் விவசாயத்தில் அவற்றைப் பயன்படுத்துவது குறித்த விவாதத்தையும் இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
