மினி பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர்கள் உட்பட 26 பேர் பலி... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
லாரி

 

அசாம் மாநிலத்தில் மினி பஸ் மீது கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் கல்லூரி மாணவர்கள் பலரும் அடங்குவர்.

அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா அருகே ரங்காஜன் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை 715-ல் இந்த விபத்து நிகழ்ந்தது. கோலாகாட்டில் இருந்து நாகாவோன் நோக்கிச் சென்ற மினி பஸ் மீது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதியது.

மோதலின் வேகத்தில் மினி பஸ் பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து போலீசார், மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

26 killed in head-on collision between mini-bus, truck in Assam's Kaziranga - India Today

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், விதிமீறல் ஏற்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.