சட்டமன்றத் தேர்தல்.. அதிமுக-வுக்குத் தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆதரவு!
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்துப் பேசினார். அப்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குத் தனது கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக ஷேக் தாவூத் அறிவித்தார்.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா அவர்களின் பொற்கால ஆட்சியை அமைக்கத் தங்களது கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் பாடுபடுவார்கள் என அவர் உறுதி அளித்தார். இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஷேக் தாவூத், தி.மு.க அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

"சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க கருதி ஏமாற்றி வருகிறது. தமிழக அரசியலில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. எனவே, 'உரிமையை நோக்கி நடப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தத் தேர்தலை அ.தி.மு.க-வுடன் இணைந்து சந்திப்போம். சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு பெருகி வருவது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
