அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து... முதல்வர் விஜய் சட்டப் பேரவையில் தனித் தீர்மானம்!

 
சட்டசபை சட்டப்பேரவை விஜய் முதல்வர் பட்ஜெட்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் எனச் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மாநிலத்தின் நீண்டகால மரபுகளைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் உரிய மரியாதையை வழங்கும் நோக்கத்துடனும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் இந்தத் தனித் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முன்மொழியவுள்ளார்.

சட்டசபை விஜய்

கடந்த 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது வழக்கத்தில் உள்ளது. மேலும் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதியிலிருந்து இது மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது சில நிகழ்ச்சிகளில் இந்த முறையில் மாறுதல்கள் ஏற்பட்டதை அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

விஜய்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவும். அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.