இன்று முதல் தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடக்கம் மற்றும் மானியக் கோரிக்கை விவாதம்!

 
சட்டப்பேரவை

 

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், இன்று முதல் கேள்வி நேரம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வழக்கமாக 10 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அந்தந்த துறைகளில் இருந்து பதில்கள் வராத காரணத்தால் இன்று 5 கேள்விகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் பா.ஜ.க. உறுப்பினர் போஜராஜன் ஊட்டி படகு இல்லத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசுகிறார்.

ஆனந்த் சட்டப்பேரவை விஜய்

இதனைத் தொடர்ந்து, சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டசபையில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பேசி வருகின்றனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்குச் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் வெ.சம்பத்குமார் ஆகியோர் பதிலளித்துப் பேசுகின்றனர்.

சட்டப்பேரவை

இந்த விவாதங்களின் நிறைவாகத் தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த ஆகஸ்டு 5 மற்றும் 6-ந் தேதிகளில் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கை விவாதங்கள் வார நாட்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.